For admission related queries

044481 34044 / 88705 88129

பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் ராஜ் தொலைகாட்சி நிறுவனம் & பயனீர் கலை அறிவியல் கல்லூரி

பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் 10.01.2025 அன்று பயனீர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ராஜ் தொலைகாட்சி நிறுவனம் இணைந்து பொங்கல் விழா முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் ஒன்றினை நிகழ்த்தியது. மதிப்பிற்குரிய ஸ்ரீமதி செயலர் அபர்ணா ராஜ்குமார்,  பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  முன்னிலையில் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இப்பட்டிமன்றத்தின் நடுவராக தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர் கு.பிரகாஷ் அவர்கள் பல நல்ல கருத்துகளை மாணவர்களுக்கு வழங்கினார். “மகத்தான வாழ்க்கைக்குப் பெரிதும் தேவை நல்ல மனமே” எனும் தலைப்பில் முனைவர் பூ.மு.அன்பு சிவா, திருமதி சரண்யாதேவி, முனைவர் தி.பழனிச்சாமி ஆகியோரும், “மகத்தான வாழ்க்கைக்குப் பெரிதும் தேவை நிறைய பணமே” எனும் தலைப்பில் முனைவர் கோ.கதிரவன், கவிஞர் க.பாண்டிச்செல்வி, முனைவர் சி.எம்.ஆனந்த பத்மநாபன் ஆகியோரும் உரையாற்றினர்.  சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதாக பேச்சாளர்களின் உரை அமைந்திருந்தது. இப்பட்டிமன்ற நிகழ்வை ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ரசித்து மகிழ்ந்தனர். இறுதி நிகழ்வாக கல்லூரி நிர்வாக அதிகாரி கோ.பத்மநாபன் மற்றும் ப.ராஜப்பன் அவர்கள் பேச்சாளர்களுக்கு விருதுகள் வழங்கி  கௌரவப்படுத்தினர்.

On behalf of Pioneer College of Arts and Science, the Department of Tamil organized a special program on January 10, 2025, in collaboration with Raj Television Company, as part of the Pongal Festival celebrations. The event was grandly held in the presence of the Honorable Secretary, Smt. Aparna Rajkumar of Pioneer College of Arts and Science. The moderator of the event was Dr. K. Prakash (Elakkiyapithan), Head of the Tamil Department, who shared several valuable insights with the students.

Dr. P.M. Anbu Shiva, Mrs. Charanyadevi, and Dr. T. Palaniswami spoke on the topic, “A Great Life Requires a Good Mind,” while Dr. K. Kathiravan, Poet K. Pandichelvi, and Dr. C.M. Ananda Padmanabhan delivered their speeches on the topic, “A Great Life Requires a Lot of Money.”

The speakers’ presentations were both thought-provoking and humorous, leaving the audience entertained and reflective.

More than 500 students and professors from the college enthusiastically participated in the forum and enjoyed the session.

As the concluding event, the college administrative officer, Mr. K. Padmanaban and Principal Prof. Mr. P. Rajappan, honored the speakers by presenting them with awards.