தமிழ்த்துறை
'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' , 'கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை' என்ற தமிழ்ச் சான்றோர் வாக்கிற்கிணங்க நம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி 1998 முதல் கல்விச்சேவை ஆற்றிவருகிறது. பல்வேறு துறைகளால் சிறப்புற்று வரும் நம் பயனீர் கல்லூரியில் தமிழ்த்துறையும் ஓர் அங்கமாகப் பரிமளிக்கிறது.
'வாழ்க்கைக்கு பொருள்வேண்டும்; நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும்' என்ற உயரிய நோக்கோடு மானுட விழுமியங்களை மாணாக்கர் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.